விளங்குளத்தில் சனிப்பெயர்ச்சி விழா: மணக்கோலத்தில் காட்சி தரும் சனீஸ்வரர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் உள்ள விளங்குளம் கிராமத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலில் டிசம்பர் 19ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாகத் துவங்கியது.  
விளங்குளத்தில் சனிப்பெயர்ச்சி விழா: மணக்கோலத்தில் காட்சி தரும் சனீஸ்வரர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் உள்ள விளங்குளம் கிராமத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலில் டிசம்பர் 19ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாகத் துவங்கியது.  

மங்கள சனீஸ்வரர் திருக்கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயிலில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

சூரியபுத்திரரான சனிபகவான் அட்சயபுரீஸ்வரரால் சாப விமோசனம் பெற்று தனது ஊனம் நீங்கி காக வாகனம் பெற்று மந்தா தேவி, ஜேஷ்டாதேவி ஆகிய இரு மனைவிமாருடன் மணக்கோலத்தில் இத்தலத்தில் தனி சந்நிதிகொண்டு அருள்புரிவது சிறப்பு.  ஆதலால் இத்தலம் மங்கள சனீஸ்வரர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகின்றது.
 

டிசம்பர் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை சனிபகவான் விருச்சிக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு பிரவேசித்து தனது சஞ்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த பெயர்ச்சியால் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளாக ரிஷபம் (அஷ்டமசனி), மிதுனம் (கண்டசனி), கன்னி (அர்த்தாஷ்டம சனி), விருச்சிகம் (பாதசனி), தனுசு (ஜென்மசனி), மகரம் (ஏழரைசனி), அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அந்த வகையில், சனிதோஷ பரிகாரத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயமும் திகழ்கின்றது.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு டிசம்பர் 24ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும் (கட்டணம் ரூ.100), தொடர்ந்து டிசம்பர் 30, 31 தேதிகளில் பரிகார ஹோமமும் (கட்டணம் ரூ.200) நடைபெற உள்ளது.

விளங்குளம் அருள்மிகு அபிவிருத்தி நாயகி சமேத அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமங்களில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு ஆலய செயல் அலுவலர் பி. எஸ். கவியரசுவை தொடர்புகொள்ளலாம் (செல் : 9443753808).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com