அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் ரூ.76 லட்சம் ரொக்கம், 140 கிராம் தங்கம், 1,500 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.76 லட்சம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் ரூ.76 லட்சம் ரொக்கம், 140 கிராம் தங்கம், 1,500 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும், பெளர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். எனவே, ஒவ்வொரு மாதமும் கோயில் உண்டியலில் உள்ள காணிக்கைகள் எண்ணப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாதத்துக்கான கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை எண்ணப்பட்டது. கோயில் இணை ஆணையர் ஜெகந்நாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.76 லட்சத்து 6 ஆயிரத்து 298 ரொக்கம், 140 கிராம் தங்கம், 1,500 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.
ரொக்கப் பணம் கோயில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com