ஆரம்பாக்கத்தில் திருவிளக்கு பூஜை

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை 24ஆவது திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்பாக்கத்தில் திருவிளக்கு பூஜை

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை 24ஆவது திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
 ஆரம்பாக்கத்தில் உள்ள ஐயப்பா சேவா சங்கத்தினர் ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜையை கோலாகலமாக நடத்துவார்கள். அதே போல இந்தாண்டு 24வது திருவிளக்கு பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேந்தி ஐயப்பனை வழிபட்டனர்.
 இந்த விழாவையொட்டி ஆரம்பாக்கம் முக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கணபதி ஹோமம், பந்தக்கால் நிகழ்வு, மகா திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு சுவாமி பிரசாத விநியோகம் செய்யப்பட்டதோடு, அன்னதானமும் செய்யப்பட்டது.
 பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் அம்பலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை வணங்கினர். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்பலத்தில் இருந்து ஆரம்பாக்கம் நல்லட்ராயன்கண்டிகை, ஜிஎன்டி சாலை, செக்குமேடு, கணபதி நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளக்கேந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது பக்தர்கள் ஐயப்பனைப் புகழ்ந்து பக்திப் பாடல்களைப் பாடியவாறு சென்றனர்.
 தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்பன் அலங்கரிக்கப்பட்டு திருவீயுலா கொண்டு செல்லப்பட்டார். இந்த நிகழ்வை ஒட்டி தாயம்கா கச்சேரி, பஞ்சவாத்தியம், சந்தமேளம், உடுக்கைப் பாட்டு, குருதி தர்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றன.
 இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை ஆரம்பாக்கம் கிராம முக்கியஸ்தர் இ.தசரதன், பி.சேகர், ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகளான தலைமை குருக்கள் சி.கே.பாபு, ஏ.எம்.சம்பத், வி.ஜடராயன் உள்ளிட்டோரும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com