திருமலையில் சுப்ரபாத சேவை ரத்து

திருமலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது


திருமலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதம் மார்கழி. இந்த மாதத்தில் திருமலையில் ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுவது வழக்கம். தினந்தோறும் ஏழுமலையான் சேவை அதிகாலையில் சுப்ரபாதத்துடன் தொடங்கும். வரும் 16ஆம் தேதி மார்கழி மாதம் தொடங்க உள்ளது. அதனால் அதிகாலை வேளையில் நடைபெறும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சேவை நடைபெற உள்ளது. ஜன. 14ஆம் தேதி வரை திருமலையில் இச்சேவை நடைபெற உள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தங்கச் சேலையில் தாயார்
 திருச்சானூர் பத்மாவதி தாயார் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (டிச. 11, 12) தங்கச் சேலையில் தரிசனம் அளிக்க உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தாயாருக்கு தற்போது கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அவர் திருச்சானூரில் உள்ள பத்ம சரோவரம் எனப்படும் திருக்குளத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளில், உத்திராட நடசத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே அவரது ஜென்ம நட்சத்திரத்தன்று நிறைவு பெறும் வகையில் தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் 12ஆம் தேதி தாயாரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு பஞ்சமி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது. 
இதையொட்டி, மூலவர் பத்மாவதி தாயார் 11ஆம் தேதியும், 12ஆம் தேதியும் தங்கச் சேலையில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க உள்ளார். பக்தர்கள் தாயாரை தங்கச் சேலையில் தரிசித்து அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com