திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 1 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன முடி காணிக்கை மண்டபம்.
திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 1 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன முடி காணிக்கை மண்டபம்.

திருத்தணி மலைக்கோயிலில் ரூ.1 கோடியில் முடி காணிக்கை மண்டபம்

திருத்தணி முருகன் மலைக்கோயிலில், ரூ. 1 கோடி செலவில் நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.


திருத்தணி முருகன் மலைக்கோயிலில், ரூ. 1 கோடி செலவில் நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். அவர்களில் பலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். 
இந்நிலையில், முடி காணிக்கை செலுத்த மலைக் கோயில் பகுதியில் நிரந்தரக் கட்டடம் இல்லை. தற்போது மாடவீதியில் இலவச கழிப்பறைக் கட்டடம் அருகே குறுகிய இடத்தில் இந்த முடி காணிக்கை செலுத்தும் மையம் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு போதிய வசதிகளும் இல்லை.
இதைக் கருத்தில்கொண்டு, நவீன முடி காணிக்கை மண்டபத்தை கட்டுவதற்கு கோயில் பொதுநிதியில் இருந்து, ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரிடம் இடம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மலைக்கோயிலில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே, இக்கட்டடத்தின் பணிகள் கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கின. தற்போது இப்பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கோயில் அதிகாரிகள் தரப்பில் கூறியது:
பக்தர்கள் நலன் கருதி, முடி காணிக்கை செலுத்த, ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 
இக்கட்டடத்தில், முடி காணிக்கை செலுத்தும் அறை, கழிப்பறை, குளியல் அறை, ஆடைகள் மாற்றும் இடம் என தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டு மார்ச் இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com