

தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாணத்தில் நீராட சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்குப் பரிகார பூஜை செய்வதற்காக ஏராளமானோர் வருவார்கள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும், புதிய புயல் சின்னம் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளதாலும் கடலில் புனித நீராட சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடல் நீர் மட்டம் நேற்று திடீரென அதிகமாக உயர்ந்ததால், நவக்கிரக சிலைகள் முற்றிலும் மூழ்கியது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி புனித நீராடத் தடை விதித்துள்ளது. இதனால், நவக்கிரகங்களைத் தரிசிப்பதற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.