கூத்தனூரை அடுத்து சரஸ்வதிக்கு அமைந்துள்ள இரண்டாவது தனிக்கோயில்!

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவி சிவாலயங்களில் தனி சந்நிதி பெற்றும், சில தலங்களில் துர்கா..
கூத்தனூரை அடுத்து சரஸ்வதிக்கு அமைந்துள்ள இரண்டாவது தனிக்கோயில்!

கல்விக்கடவுளான சரஸ்வதி தேவி சிவாலயங்களில் தனி சந்நிதி பெற்றும், சில தலங்களில் துர்கா, லஷ்மி, சரஸ்வதி என்று முப்பெரும் தேவிகளாகவும் எழுந்தருளியுள்ளாள். 

வெகு சில இடங்களிலேயே தனி ஆலயங்கள் உள்ளன. அவ்வரிசையில் சென்னைக்கு அருகில் கலைமகளுக்கு ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. கூத்தனூரை அடுத்து சரஸ்வதி தேவிக்கு அமைந்த இரண்டாவது தனிக்கோயில் என பெருமையாகப் பேசப்படுகின்றது. 

பெரியபாளையத்திலிருந்து ஊத்துக் கோட்டை செல்லும் வழியில் உள்ள அரியப்பாக்கம் கிராமத்தில் சரஸ்வதி தேவிக்கு அபூர்வமாக ஓர் ஆலயம் கட்டப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு குடமுழுக்கு வைபவம் நடத்தப்பட்டது. 

கருவறையில் பீடத்துடன் சுமார் 8 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் அபயவரத ஹங்தங்களுடன், பின் கரங்களில் ஜபமாலை, ஏட்டுச் சுவடிகள் தாங்கி, வலது காலை மடித்துக் கொண்டு மடியில் வீணையுடன் ஞானசரஸ்வதி என்ற திருநாமம் கொண்டு அருளும் நான்முகனின் நாமகள் காட்சி தரும் அழகை இன்றைக்கெல்லாம் சேவித்துக்கொண்டே இருக்கலாம். 

இவ்வாலயத்தில் நவராத்திரி விழா அக்டோபர் 10-ல் தொடங்கி தினசரி அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம பாராயணங்களுடன் நடந்து வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி விஜயதசமி. அன்று கல்வி பயில தொடங்கும் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் வைபவம் நடைபெற உள்ளது. 

பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அம்பாளை வேண்டிக் கொண்டு வெள்ளி ஊசியால் நாக்கில் எழுதப்படும். அன்று முழுவதும் பக்தர்கள் பங்கேற்கலாம். அர்ச்சனைப் பொருட்களுடன் அவசியம் தேன் வாங்கி வரவேண்டும். 

தொடர்புக்கு: ஆலய அர்ச்சகர் -  91235 82605 / 98408 77018.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com