காஞ்சிபுரம் மாகறலீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி

காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் ஊரில் உள்ள மாகறலீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ...
காஞ்சிபுரம் மாகறலீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப்பணி

காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் ஊரில் உள்ள மாகறலீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும், வாலாஜாபாத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் உள்ள சிலம்பேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள தொன்மையான சிதிலமடைந்த விசாலாக்ஷி ஸமேத விஸ்வநாதர் கோவிலில் சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொண்டனர்.

மாகறலைச் சேர்ந்த வெங்கடேசன், திருஞானசம்பந்தர் மடத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோர் உழவாரப்பணிக்குண்டான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து கொடுத்தனர். தண்டலத்தில் உள்ள ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி NSS மாணவ மாணவியர் பலரும், பேராசிரியர் ஆனந்தராஜ் தலைமையில் இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். 

இங்குள்ள மிகப்பெரிய அரச மரத்தில் அம்பாள் வாசம் செய்வதாக பிரசன்னம் தெரிவித்ததால் அனைவரும் அதற்கு மஞ்சள் நீர் சமர்ப்பித்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள சிலம்பேஸ்வரர் கோவிலில் பூஜை செய்யும் மணிகண்டன், இக்கோவிலில் உள்ள விக்ரஹங்களுக்கு பூஜை செய்து ஆரத்தி காண்பித்தார். காலை 8 மணிக்குத் துவங்கிய இப்பணி மாலை 4 மணிக்கு நிறைவுற்றது.

- வி. இராமச்சந்திரன், நிர்வாக அறங்காவலர்
அண்ணாமலையார் அறப்பணிக்குழு, சென்னை
அலைபேசி: 9884080543

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com