12 ராசிக்காரர்களுக்குமான ஆகஸ்ட் மாத பொது ராசி பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம்.
மேஷம்:
பலம்: சுபநிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி
பலவீனம்: தொழிலில் சிறு சிக்கல், உத்தியோகத்தில் பணிச்சுமை
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று நவக்கிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13
{pagination-pagination}
ரிஷபம்:
பலம்: உழைப்பிற்கேற்ற அங்கீகாரம், பணவரவு
பலவீனம்: உடல் ஆரோக்கியத்தில் சிக்கல், பேச்சில் தடுமாற்றம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16
{pagination-pagination}
மிதுனம்:
பலம்: வாக்கு வன்மை அதிகரிக்கும். தனவரவு உண்டு. வீடு மனை வாகன பாக்கியம் கிட்டும்.
பலவீனம்: உடற் சோர்வு, மனதில் வீண் பயம்.
பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்கத் திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
{pagination-pagination}
கடகம்:
பலம்: எடுத்த முயற்சிகள் நல்லபடியாக முடியும். சொத்து சேர்க்கை உண்டு.
பலவீனம்: எதிலும் அவசரம், கடன் சுமை அதிகரிப்பு
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லாக் காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
{pagination-pagination}
சிம்மம்:
பலம்: சுபவிரையம் - தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பலவீனம்: குடும்பத்தினர், குழந்தைகளுடன் கருத்து மோதல்
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்கப் பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23
{pagination-pagination}
கன்னி:
பலம்: பணவரவு, குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்குதல்
பலவீனம்: தொழிலில் - உத்தியோகத்தில் அதிக சுமை
பரிகாரம்: குலதெய்வத்தினை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25
{pagination-pagination}
துலாம்:
பலம்: பணவரவு, செயலில் முன்னேற்றம்
பலவீனம்: சிறு சிறு தடைகள்
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி
கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28
{pagination-pagination}
விருச்சிகம்:
பலம்: புதிய வீடு மனை வாங்குதல் - தைரியம் அதிகரித்தல்
பலவீனம்: சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதம், பணம் சார்ந்த விஷயங்களில் கவனம்.
பரிகாரம்: திருமுருகாற்றுப்படையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால்
கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30
{pagination-pagination}
தனுசு:
பலம்: வேலைகளில் சுறுசுறுப்பு - குடும்பத்தில் மகிழ்ச்சி
பலவீனம்: பண நெருக்கடி - நேரம் தவறிடுதல்
பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்ப்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர
எல்லா நன்மைகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
{pagination-pagination}
மகரம்:
பலம்: புதிய வீடு மனை பாக்கியம் கிடைத்தல் - தொழிலில் ஏற்றம்
பலவீனம்: செயல்களில் பதற்றம் - ஆரோக்கியத்தில் குறைபாடு
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும்.
ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
{pagination-pagination}
கும்பம்:
பலம்: சுபநிகழ்ச்சிகள் இருந்த தொய்வு நீங்குதல் - முயற்சிகளில் வெற்றி
பலவீனம்: வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை - மனம் ஒருமுகபடாமை
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய
தடைகளைப் போக்கும். நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
{pagination-pagination}
மீனம்:
பலம்: குடும்பத்தில் மகிழ்ச்சி - புதிய சொத்துக்கள் சேருதல்
பலவீனம்: எடுக்கும் காரியங்களில் அதிக கவனம் தேவை - குழந்தைகளில் நலனில் அக்கறை தேவை
பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடச் செல்வம் சேரும்.
கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11