குற்றாலநாதர் சுவாமி கோயில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்

குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் திருவாதிரை திருவிழாவின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயில் திருவாதிரை திருவிழாவின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவபெருமான் திருநடனம் புரிந்த பஞ்ச சபைகளில் சித்திர சபையான இத்திருக்கோயிலில் நிகழாண்டுக்கான திருவாதிரை திருவிழா வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழா நாள்களில் காலை, மாலை வேளைகளில் உற்சவர் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. மேலும், நடராசப் பெருமானுக்கு காலை 9.30-க்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவத் தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர், நடராசர், சுவாமி, அம்பாள் ஆகிய 5 தேர்கள் பவனி வந்தன. இவற்றை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

வரும் 21-ஆம் தேதி சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 23-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவத் தீபாராதனையும் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com