பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர், உற்சவர், விநாயகர், அஸ்த்ர தேவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, கோயிலை சுற்றி வலம் வந்து கொடி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. 
அங்கு ஆறு கலசங்கள் வைக்கப்பட்டு மயூர யாகம் நடத்தப்பட்டு, தங்கக் கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக வாத்ய பூஜை, தேவாரம், திருமுறைப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தங்கக் கொடி மரத்துக்கு மாவிலை, தர்ப்பை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடத்தப்பட்டது. 
தொடர்ந்து கொடி மண்டபத்துக்கு எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத முத்துக் குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உச்சிக்காலத்தின் போது மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 
பத்து நாள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளி யானை, கற்பக விருஷம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி வீதி உலா எழுந்தருள்கிறார். வரும் மே மாதம் 27-ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், மே மாதம் 28-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகின்றன. 
விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கொடியேற்ற நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com