கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆலயங்ககளில் விநாயகர் சதுர்த்தி விழா

கும்பகோணம் பகுதியிலுள்ள,  அருள்மிகு   மடத்துத் தெரு, பகவத்  விநாயகர் ஆலயம், காசிராமன் தெருவிலுள்ள,  வேத விநாயகர்  ஆலயம் ,யானையாடி - ஜெகந்நாத விநாயகர் ஆலயம், பாலக்கரை அருகிலுள்ள

கும்பகோணம் பகுதியிலுள்ள,  அருள்மிகு   மடத்துத் தெரு, பகவத்  விநாயகர் ஆலயம், காசிராமன் தெருவிலுள்ள,  வேத விநாயகர்  ஆலயம் ,யானையாடி - ஜெகந்நாத விநாயகர் ஆலயம், பாலக்கரை அருகிலுள்ள,  இரட்டை விநாயகர் ஆலயம், ஏஆர்ஆர் சாலையில் உள்ள தாமோதர விநாயகர் ஆலயம் 

அதன் அருகிலுள்ள ஸ்ரீவிநாயகர் ஆலயம், மற்றும் கும்பகோணத்தை அடுத்துள்ள, சுவாமிமலை- சுவாமிநாதசுவாமி ஆலயத்திலுள்ள,  ஸ்ரீவல்லப கணபதி சன்னதி  , சுவாமிமலை - மேல வீதியிலுள்ள, கார்னர் விநாயகர்  ஆலயம், காமராஜ்நகர் -ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் விநாயக  சதுர்த்தியை முன்னிட்டு  சிறப்பு அபிஷேகமும்,   சிறப்பு அலங்காரமும்,  தூப- தீபாராதனை வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து உற்சவ விநாயக பெருமான் வீதிஉலா திருக்காட்சியும் நடைப்பெற்றது.  

மேலும் திருப்புறம்பயம் - பிரளயங்காத்த விநாயகருக்கு 14-9-2018 அன்று   மாலை முதல் விடியல்  2 மணிவரை   சிறப்பு  தேனபிஷேகம் நடைப்பெற்றது. இதனை  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வந்திருந்து,  சுவாமியை தரிசனம் செய்தார்கள். 

திருவலஞ்சுழி - சுவேதவிநாயகர் ஆலயத்தில்,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைப்பெற்று வந்த பெருவிழாவில் திருத்தேரோட்டமும் நடைப்பெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com