சிம்ம ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி சாதகமா? பாதகமா?

ஜென்ம ராசிக்கு 4-ல் குரு சஞ்சாரம் செய்கிறார். இதனால் அவர் பார்வை 8,10,12-ம் வீடுகளுக்குக் கிடைக்கிறது. 8-ம் இடம்..
சிம்ம ராசிக்கு இந்தாண்டு குருப்பெயர்ச்சி சாதகமா? பாதகமா?

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் சிம்ம ராசிக்கு துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 4-ல் குரு சஞ்சாரம் செய்கிறார். இதனால் அவர் பார்வை 8,10,12-ம் வீடுகளுக்குக் கிடைக்கிறது. 8-ம் இடம் என்பது பிதுரார்ஜித சொத்துக்கள், ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பி.எஃப்., கிராஜூவட்டி போன்றவற்றைக் குறிக்கும்.

ஆக இந்த இடத்துக்குக் குருபார்வை கிடைப்பதால் தாமதமாகின்ற இத்தகைய வரவுகள் அவர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும். 10-ம் இடமான ஜீவனஸ்தானத்திற்கும் குருபார்வை கிடைப்பதால் இந்த ஆண்டு பொதுவாக வருமானம் நல்லவிதமாகவே இருந்து வரும். 12-ம் இடமென்பது பொதுவாக விரைய ஸ்தானம் என்பார்கள். இதேவீடுதான் ஒருவரின் முதலீடு, ஒருவருடைய பொருள் வாங்குதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வீட்டிற்குக் குருபார்வை இருப்பதால் ஒருவர் நல்லமுறையில் முதலீடு செய்ய முடியும். அதேபோல் சகாய விலையில் பொருட்களை வாங்க முடியும்.  

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் செவ்வாயின் பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உடலில் காயங்கள், சிராய்ப்புக்களுக்கு வாய்ப்புண்டு. அதே போன்று 2019 புரட்டாசி மாதத்திலும் ஜென்மராசிக்கு செவ்வாய் வருவதால் உடலில் காயங்கள் ஏற்படக்கூடும். ஆகவே இந்த மாதங்களில் கூர்மையான கருவிகளைக் கையாளும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் கவனத்துடன் இருத்தல் நல்லது.  

அடுத்தது குடும்ப வாழ்க்கையைப் பார்ப்போம். பொதுவாகக் குடும்ப வாழ்க்கை அமைதியாகத் தோன்றினாலும், மார்கழி, தை மாதங்களில் சற்றுப் பொறுமையுடன் இருத்தல் அவசியம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியின் மூலம் ஸ்திரசொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கிறது. வீடோ அல்லது நிலமோ நல்ல முறையில் வாங்க முடியும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்ப்போருக்கு சற்றுத் தாமதமாகவே அந்தப் பாக்கியம் கிடைக்கும். 5-ம் வீட்டில் சனி இருப்பதால், 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை ஏற்படுகிறது. இதுதான் தாமதத்திற்குக் காரணம். சனிக்குத் தகுந்த பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

வியாபாரம் செய்வோருக்கு: வியாபாரிகள் இந்த ஓராண்டு முழுவதும் எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும். 7-ம் வீட்டிற்குடைய சனி 5-ல் இருப்பதால் சற்று ஏமாற்றமடைய வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே வியாபாரத்தில் சற்று அதிகப்படியான கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு: 6-ம் வீட்டு அதிபர் 5-ல் இருப்பது சற்று பாதகமான விஷயம் என்றாலும் 10-ம் வீட்டிற்கு குருபார்வை இருப்பது சாதகமான விஷயம்தான். வேலை வேட்டையில் இருப்போருக்கு  சற்றுத் தாமதத்திற்குப் பின் வேலைக் கிடைக்கும். அதேபோல் பதவி உயர்வு எதிர்பார்ப்போருக்கு சிறிது ஏமாற்றத்திற்குப்பின் பதவி உயர்வு கிட்டும்.

பரிகாரம்: தினமும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் போடலாம். அனுமன் சாலீஸா படித்து வரலாம். 

*****

கன்னி ராசிக்காரர்களே, உங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களைப் படிக்க நாளை வரை காத்திருங்கள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com