பாடகச்சேரி சுவாமிகள் குருபூஜை விழா

உயர்தவ ஞானச்செல்வர் பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 70-ஆம் ஆண்டு குருபூஜை விழா; சென்னை திருவெற்றியூர்..
பாடகச்சேரி சுவாமிகள் குருபூஜை விழா

(1) உயர்தவ ஞானச்செல்வர் பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 70-ஆம் ஆண்டு குருபூஜை விழா; சென்னை திருவெற்றியூர் பட்டிணத்தடிகள் கோயில் சாலையில் சுவாமிகளால் நிறுவப்பட்டுள்ள சிதம்பரம் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் சத்திய ஞான சபையில் (இவரது சமாதி வளாகம்) ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பூர நட்சத்திரத்தில் காலை 10.30க்கு மேல் 12.00 மணிக்குள் மஹா அபிஷேகாதி பூஜை மற்றும் மஹேஸ்வர பூஜை வைபவங்களுடன் நடைபெறுகின்றது.

(2) சுவாமிகளின் 70-வது ஆண்டு குருபூஜை விழா கும்பகோணம் திருநாகேஸ்வரம் தடத்திலுள்ள கூழ் சாலை, முக்தி குள மண்டபத்தில், ஆகஸ்ட் 3-ஆம் நாள் நடைபெறுகிறது. விழா அன்று காலை 7.00 மணிக்குத் தொடங்கி வழிபாடு, ஜோதி தரிசனம், பாதரச லிங்க தரிசனம், குருபூஜை, மஹேஸ்வர பூஜை, ஸ்ரீ நடராஜர் பூஜை, பொரிய அளவில் அன்னம் பாலிப்பு போன்ற நிகழ்ச்சிகளுடன்; நிறைவாக மாலை 6.00 மணிக்கு ஜோதி தரிசனத்துடன் முடிவடைகிறது. இவ்விடத்து ஏற்பாடுகளை ஸ்ரீ சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள் (பி) டிரஸ்ட் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com