ஓசூரம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

செங்கல்பட்டை அடுத்த பெரியநத்தம் -காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள ஓசூரம்மன் கோயிலில் மாட்டுப்
வீதியுலா வந்த ஓசூரம்மன்  கோயில் அம்மன்.
வீதியுலா வந்த ஓசூரம்மன்  கோயில் அம்மன்.


செங்கல்பட்டை அடுத்த பெரியநத்தம் -காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள ஓசூரம்மன் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி, அம்மன் வீதியுலா, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
புதன்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட வாசனைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, புஷ்பங்களால் பிரபையுடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீற்றிருக்க, மாட வீதிகள், பெரியநத்தம் உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக அம்மன் வீதியுலா நடைபெற்றது. இரவு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், கோயில் நிர்வாகிகள் மற்றும் பெரியநத்தம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com