பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

பெருநகர் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்


பெருநகர் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த பெருநகர் கிராமத்தில் பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தைப்பூச தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கடந்த 10ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 13 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அதோடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இவ்விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட உற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. பின்பு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, தேர் மீது சுவாமி அமர்ந்தார். பின்னர், திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட தேரில் ராஜ வீதிகள் வழியாகச் சென்ற சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம், உத்தரமேரூர், சாலவாக்கம், பெருநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த  திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், விழாக்குழுவினர், கிராமத்தினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com