30-வது நாளில் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவிள் 30-ம் நாளான இன்று ராமர் நீல நிறப் பட்டாடை உடுத்தி பல்வேறு..
30-வது நாளில் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவிள் 30-ம் நாளான இன்று ராமர் நீல நிறப் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து  வருகிறார். 

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்துவரும் அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். சயன கோலத்தில் தரிசிக்க  நாளையுடன் கடைசி நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரைக் காண காஞ்சியில் குவிந்துள்ளனர். 

அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதனால், நாளை பகல் 12.00 மணியுடன் அத்திவரதர் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை 5 மணியிலிருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்குப் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 15-ம் தேதி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளதால் அன்றும் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com