ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ4.39 கோடி

 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.4.39 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ரூ.44 லட்சம் நன்கொடை
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது.
 இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சம்,  பர்ட் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம்,  ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

71,645 பேர் தரிசனம்
 திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 71,645 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இவர்களில் 23,150 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். புதன்கிழமை காலை நிலவரப்படி 3 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர். 
அவர்களின் தரிசனத்திற்கு 6 மணிநேரம் வரை தேவைப்பட்டது. நடைபாதை,  நேர ஒதுக்கீடு,  விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ ஸ்வாமி கோயிலில் 7,742 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 7,911 பக்தர்களும்,  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 14,146 பக்தர்களும்,  அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 981 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் 3,879 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

பக்தர்கள் புகார் தெரிவிக்க
 திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141,  93993 99399.  
வெயில் அளவுதிருமலையில் புதன்கிழமை வெப்பநிலை அதிகபட்சம்-78 டிகிரி பாரன்ஹீட்,  குறைந்தபட்சம்- 48 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com