இந்த வாரம் (ஏப்.5 - ஏப்.11) அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 5 - ஏப்ரல் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்..
இந்த வாரம் (ஏப்.5 - ஏப்.11) அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 5 - ஏப்ரல் 11) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களைச் சுற்றி நடந்த சில சம்பவங்கள் உங்களை ஆழமாகச் சிந்திக்க வைத்து, முனைப்புடன் செயல்படத் தூண்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். விலகிப்போன உறவினர்கள் திரும்பி வருவார்கள். உங்களுக்கு எதிரான வழக்குகள் தோற்கும்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அமைதியாக வேலைகளைச் செய்யவும். பொருளாதார வசதியில் குறைவில்லை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு கொள்முதலில் சுமாரான லாபமே கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களை தேடிச் செல்லுங்கள். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். 

அரசியல்வாதிகளின் திட்டங்கள் யாவும் நிறைவேறும். மாற்றுக் கட்சிக் காரர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சம்பந்தமில்லாத செயல்களில் ஈடுபட்டுப் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். 

கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவார்கள். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கையையும் சனீஸ்வரரையும் வழிபட்டு வர, துன்பங்கள் குறையும். 

அனுகூலமான தினங்கள்: 5, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

புதிய நட்புகள் உருவாகும். மனச்சோர்வுக்கு ஆளாகாமல் உழைப்பீர்கள். தேக ஆரோக்கியம் பலப்படும்.  பணவிரயம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக நடந்து கொள்ளவும். உறவினர்களை அரவணைத்துச் செல்லவும். 

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பார்கள். பணவரவு இருக்கும். சிலர் பதவி உயர்வும் பெறுவர். வியாபாரிகள் தொடரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த  பலன் கிடைக்கும். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் செலவுகளை ஈடு செய்யும். 

அரசியல்வாதிகளுக்கு  எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மேலிடத்தின் ஆதரவு உண்டு. தொண்டர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டாகும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் சோம்பேறித்தனத்திற்கு இடம் தராமல் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறவும். 

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வர, சௌகரியங்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 5, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். எடுத்த காரியங்கள் யாவும் மெதுவாகவே வெற்றியைக் கொடுக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. உடல்நலம் நன்றாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் மாற்றங்களைக் காண்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் மந்த நிலைமையை எதிர்கொள்வார்கள். கூட்டாளிகளிடம் மனக்கசப்புகள் உண்டாகலாம். 

விவசாயிகள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையாக இருக்கவும். எனினும் கௌரவம்  குறையாதிருக்கும். 

கலைத்துறையினர் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும். பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்துவார்கள். வீண் யோசனைகள்  உங்கள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் பாடங்களைப் பலமுறை கவனம் செலுத்தி படிப்பதால் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நலம் பெறலாம். 

அனுகூலமான தினங்கள்: 6, 7.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எடுத்த காரியங்களில் படிப்படியான வெற்றிகள் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகளைப் பெறுவீர்கள். பெற்றோர் வழியில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தையும் பதவி உயர்வையும் பெறுவார்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி, வருமானத்தைப் பெருக்க முயல்வீர்கள். பிரதிநிதிகள் மூலம் விற்பனையை பெருக்குவீர்கள். விவசாயிகள் வெகு காலமாகச் செய்ய நினைத்திருந்த வேலைகளை செய்து முடிப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்க்கட்சியினரும் ஆதரவு நல்குவர். 

கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய யோசனைகளில் இருப்பார்கள். 

மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வீர்கள். எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு சுபிட்சங்கள் பெறலாம். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

காரியங்களை நினைத்தபடி முடிப்பீர்கள். பொருளாதாரச் சூழல் சீராக இருக்கும். சொத்துகளில் இருந்துவந்த தொல்லைகள் குறையும். உறவினர்களிடம் செல்வாக்கு உயரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்பை அதிகரித்துக் கொள்ளவும். பயணங்களைத் தள்ளி வைக்கவும். இருப்பினும் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். 

வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வயல்வரப்புப்  பிரச்னைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். 

அரசியல்வாதிகளுக்கு மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்ந்திவிடும். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்துகொள்வர். 
கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் சில பிரச்னைகள் தோன்றினாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். பெண்மணிகள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகரை தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 9. 

சந்திராஷ்டமம்:  5.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். சுபச் செய்திகள் தேடி வரும். செய்தொழிலில் திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்க்காமலேயே நண்பர்கள் உதவுவர். எவரிடமும் கோபமாகப் பேசுவதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். காலநேரங்களை வீணாக்காமல் உழைத்தால் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரிகள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கலாம். விவசாயிகளுக்கு மகசூல் குறைந்து காணப்படும். எனவே, புதிய குத்தகைகளை நாடிச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.  

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படாமல் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். எதிரிகளின் மிரட்டலுக்கு அடிபணிய வேண்டாம். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி தரும். செயல்கள் புதிய வடிவங்களில் மக்களைச் சென்றடையும். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகளுக்கு படிப்பில் அனுகூலமான நிலைமை தென்படும்.  

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாளை வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 5, 9. 

சந்திராஷ்டமம்: 6, 7, 8.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சந்தோஷமளிக்கும் செய்திகள் தேடி வரும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். ஆன்மிகச் சிந்தனைகளால் உயர்வடைவீர்கள். உடன்பிறந்தோர் வழியில் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். பொருளாதாரம் சீராகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சமுகமாக முடியும். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். வியாபாரிகள் செலவு செய்வதில் கவனம் தேவை. தேவைக்கு ஏற்ப சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவார்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினர் புகழும் பாராட்டும் பெறுவார்கள். சக கலைஞர்கள் உதவியால் புதிய ஒப்பந்தம் பெறுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவமணிகள் வீண்வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரைத் தரிசித்து பலன்களை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 8, 11.

சந்திராஷ்டமம்:  9, 10.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். எல்லோரும் உதவிகள் செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப் பெறுவார்கள். சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலங்கள் உண்டாகும்.

புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய கழனிகள் வாங்கும் யோகம் உண்டாகும். கால்நடைகளை  கவனமாக பராமரிக்கவும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்துவார்கள். தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். கலைத்துறையினரின் திறமைக்கு சவால்கள் உண்டாகலாம். எல்லாவற்றிலும் உங்கள் முத்திரையை பதிக்க முயலுங்கள். 

பெண்மணிகள் மனநிம்மதி பெற, ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துங்கள். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொள்ளவும்.

பரிகாரம்: திங்களன்று விநாயகரையும் செவ்வாயன்று துர்க்கையையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 6, 10. 

சந்திராஷ்டமம்: 11.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

விடாமுயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்தவும். குழந்தைகள் கல்வியில் சாதனைப் படைப்பர். பயணங்கள் அனுகூலங்களைக் கொண்டு வரும். உடன்பிறந்தோரிடம் ஒற்றுமை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேறற ஊதிய உயர்வு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் விலகி விடும். வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் தென்படும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூலில் லாபம் கிட்டும். புதிய குத்தகைகள் எடுக்க முயற்சிக்கலாம். 

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. மேலிடத்தின் அவமதிப்பையும் சந்திக்க நேரிடலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வர். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பெற்றோரும் ஆசிரியரும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.

பரிகாரம்: காலபைரவரையும் வெள்ளியன்று மகாலட்சுமியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

அளவுக்கு மீறிய யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பயணங்கள் நலம் தரும். வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள்  வேலைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு அவற்றை கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். சக ஊழியர்களின் ஆதரவும் அன்பும் இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அளளுவார்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். விவசாயிகளுக்கு வரவேண்டிய குத்தகைப் பாக்கிகள் வந்து சேரும். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினரில் எழுத்து மற்றும் எடிட்டிங் துறையை சேர்ந்தவர்களுக்கு இது சிறப்பான காலமாகும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்று அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். 

பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டும் வியாழனன்று ஆஞ்யநேயரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். செல்வாக்கு உயரும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வார்கள். பதவி உயர்வும் ஒருங்கே கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். போட்டிகளை நன்கு சமாளித்து வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் கொள்முதல் லாபங்களை அதிகமாகப் பெறுவார்கள்.  போட்டிகளுக்குத் தக்கபடி நடவடிக்கை எடுப்பார்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம்  பொறுமையோடு நடந்து கொள்ளவும். தகவல் அனுப்பும் போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறுவர். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு கல்வியில் முன்னேறுவீர்கள். விளையாட்டிலும் வெற்றி உண்டு.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வெண்பட்டு சாற்றி வழிபடுதல் நலம். 

அனுகூலமான தினங்கள்: 10, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வாழ்க்கையில் சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். துணிந்து செய்யும் செயல்கள் வீண்போகாது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதையோ ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் எல்லாரிடமும் சுமுகமாகப் பழகவும். மேலும் சற்று அதிகமாக உழைக்க வேண்டிவரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல்கள் திருப்திகரமாக முடியும். எனினும் போட்டி பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பார்கள். வழக்கமான விளைச்சல் குறைய வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. 

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பணிகளைப் பொறுப்பேற்று செய்வார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். கலைத்துறையினர் திறமைக்கேற்ற பாராட்டுகளைப் பெறுவார்கள். லாபகரமான ஒப்பந்தங்கள் செய்வார்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

பரிகாரம்: "ராம் ராம்' என்று 108 முறை எழுதி ஆஞ்சநேயரை வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்:  7, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com