மேட்டுமகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டம், மேட்டுமகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி 19 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து
மேட்டுமகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டம், மேட்டுமகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி 19 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 முன்னதாக பக்தர்கள் கடந்த ஆடி 1 ஆம் தேதி முதல் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்திற்கு சனிக்கிழமை முதலே வந்திருந்தனர். அன்று காலையில் காவிரியில் இருந்து ஊர்வலமாகத் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 அதைத் தொடர்ந்து காவிரிக்கு அம்மன் தீர்த்தவாரி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடிவிட்டு வந்து கோயில் முன் தலையில் தேங்காய் உடைக்கும் இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.
 பலர் சுவாமிக்கு முடி இறக்கி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பரம்பரை பூசாரி பெரியசாமி ஆணி செருப்பு அணிந்து, அம்பு போடுதல் எனப்படும் இரும்பு பட்டையால் அடித்துக் கொள்ளுதல் செய்து வரிசையாக அமர்ந்திருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலைகளில் தேங்காய் உடைத்தார்.
 அப்போது ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
 பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையில் போலீஸார் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com