திருமலை: 91,310 பேர் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 91,310 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  27,167 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 



திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 91,310 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  27,167 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
 திங்கள்கிழமை காலை நிலவரப்படி 1 காத்திருப்பு அறையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் 5 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன்,  ரூ.300 விரைவு தரிசனம்,  திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
 திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. திருமலையில் திங்கள்கிழமை வெப்பநிலை அதிகபட்சம் 70 டிகிரி பாரன்ஹீட்,  குறைந்தபட்சம்  40 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. 
 ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 13,190 பக்தர்களும்  சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 7,842 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 19,895 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் 1,974 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் 2,976 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com