விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகருக்கு விரதம் இருக்கவேண்டிய முக்கிய தினங்கள்!

விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச..
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: விநாயகருக்கு விரதம் இருக்கவேண்டிய முக்கிய தினங்கள்!

விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. 

விநாயகருக்கு எந்த நாட்களில் விரதம் இருந்தால் நன்மை உண்டாகும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பொதுவாக விநாயகப் பெருமானுக்கு உரிய விரதங்கள் என்றால் 11 நாட்கள் சொல்லப்படுகிறது. என்னென்ன என்றால்..

1.வெள்ளிக்கிழமை விரதம் 2.செவ்வாய்க்கிழமை விரதம் 3.சதுர்த்தி விரதம் 4.குமார சஷ்டி விரதம் 5.துருவ கணபதி விரதம் 6.சித்தி விநாயகர் விரதம் 7.துர்வாஷ்டமி விரதம் 8.நவராத்திரி விரதம் 9.வெள்ளிப்பிள்ளையார் விரதம் 10.செவ்வாய்ப்பிள்ளையார் விரதம் 11.சங்கடஹர சதுர்த்தி ஆகியனவாகும்.

இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதமே மிகவும் முக்கியமானதாகும். இந்த தினத்தில் விரதம் இருந்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com