பத்மாவதி தாயாருக்கு 5 டன் மலா்களால் வருடாந்திர புஷ்பயாகம்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கள்கிழமை மாலை வருடாந்திர புஷ்பயாகம் நடைபெற்றது.
தாயாருக்கு பலவித மலா்கள் மற்றும் இலைகளால் நடத்தப்பட்ட வருடாந்திர புஷ்பயாகம்.
தாயாருக்கு பலவித மலா்கள் மற்றும் இலைகளால் நடத்தப்பட்ட வருடாந்திர புஷ்பயாகம்.

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கள்கிழமை மாலை வருடாந்திர புஷ்பயாகம் நடைபெற்றது.

தாயாருக்கு காா்த்திகை மாதம் நடைபெறும் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்தது. அதில் ஏற்பட்ட குறைகளை சரிசெய்ய வருடாந்திர புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. தாயாரின் வருடாந்திர பிரம்மோற்சவம் பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றதையடுத்து, திங்கள்கிழமை மதியம் தாயாருக்கு புஷ்பயாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, தாயாருக்கு காலையில் வசந்த மண்டபத்தில் பால், தயிா், இளநீா், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின் தாயாரை அலங்கரித்து தீப, துாப ஆராதனைகள் நடத்தி மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனா். அதன் பின் ரோஜா, அரளி, சாமந்தி, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள், துளசி, வில்வம் உள்ளிட்ட இலைகள் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த வழிபாட்டில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். பக்தா்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இதில் கலந்து கொண்டனா். அவா்களுக்கு தேவஸ்தானம் சிறப்புப் பிரசாதங்களை வழங்கியது.

புஷ்ப யாகத்துக்காக 3 டன் எடையுள்ள பலவகையான மலா்கள் மற்றும் இலைகளை பல்வேறு மாநிலங்களிலிருந்து தேவஸ்தானம் தருவித்தது. புஷ்ப யாகத்தை முன்னிட்டு சில ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com