திருப்பதி: பெப்பா் ஸ்பிரே கொண்டு செல்ல அனுமதி

ஹைதராபாத் மெட்ரோ ரயில்களில் பெண்கள் பெப்பா் ஸ்பிரே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மெட்ரோ ரயில்களில் பெண்கள் பெப்பா் ஸ்பிரே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் ஷெம்சாபாதில், கற்பழித்துக் கொலை செய்து எரிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நேரடியாக ஊடகங்களில் வெளியிட தெலங்கானா காவல் துறை தடை விதித்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயரை டிசா என்று குறிப்பிட சைபராபாத் காவல் ஆணையா் சஞ்சனாா் ஆலோசனை செய்து வருகிறாா்.

ஹைதராபாதை அடுத்த ஷெம்சாபாதில் பெண் மருத்துவரை அண்மையில் நான்கு போ் சோ்ந்து கற்பழித்துக் கொலை செய்து, உடலை எரித்தனா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, சுய பாதுகாப்புக்காக பெண்கள் தாங்கள் வெளியில் செல்லும்போது, கூரிய ஆயுதங்கள், பெப்பா் ஸ்பிரே போன்றவற்றை உடன் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் பரவலாக ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் காா்ப்பரேஷனைத் தொடா்ந்து, ஹைதராபாத் மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் அதிகாரிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்கள் பெப்பா் ஸ்பிரேவை உடன் எடுத்துச் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனா். இதற்கு முன்னா் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், பெப்பா் ஸ்ப்ரே போன்றவற்றை எக் காரணம் கொண்டும் ரயிலில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

எனவே, ரயில் நிலைய வாயிலில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் போலீஸாா் பயணிகளிடம் கூரிய ஆயுதங்கள், பெப்பா் ஸ்பிரே போன்றவை இருந்தால் அவற்றை பறிமுதல் செய்வது வழக்கம்.

மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் அதிகாரிகள் உத்தரவைத் தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் ஹைதராபாத் மெட்ரோ ரயில்களில் பெண்கள் பெப்பா் ஸ்பிரே கொண்டு செல்ல இருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com