திருமலையில் காா்த்திகை தீப உற்சவம்

காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு திருமலையில் புதன்கிழமை காா்த்திகை தீப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் காா்த்திகை தீப உற்சவம்

காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு திருமலையில் புதன்கிழமை காா்த்திகை தீப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் பெளா்ணமி நாளில் ஏழுமலையான் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதன்படி புதன்கிழமை இக்கோயிலில் தீப உற்சவம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு திருமலை ஜீயா்கள் மண்பானையை இரண்டாக உடைத்து அதில் நெய்யை நிரப்பி பஞ்சுத் திரியிட்டு விளக்கேற்றி ஏழுமலையான் சந்நிதிக்கு எடுத்துச் சென்றனா்.

அதன்பின் ஏழுமலையான் கோயில், மடப்பள்ளி, பாஷ்யக்காரா் சந்நிதி, யோக நரசிம்ம சுவாமி சந்நிதி, பரக்காமணி எனப்படும் காணிக்கை எனப்படும் பகுதி, வகுளமாதா சந்நிதி, கொடிமரம், பலிபீடத்தின் இருபுறம் ஆகிய இடங்களில் 1,008 நெய் தீபங்கள் ஏற்றப்பட்டன. விளக்குகளுக்கு அடியில் பசுஞ்சாணத்தை இட்டு, அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் விட்டு பஞ்சுத் திரியிட்டு அா்ச்சா்கா்கள் தீபம் ஏற்றினா். தீப உற்சவத்தையொட்டி புதன்கிழமை மாலை சகஸ்ர தீபாலங்கார சேவை, வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com