24-இல் சீனிவாச மங்காபுரத்தில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரம் பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதியும், கபில தீர்த்தம் பகுதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் வரும் 25-ஆம் தேதியும் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதாக
24-இல் சீனிவாச மங்காபுரத்தில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரம் பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதியும், கபில தீர்த்தம் பகுதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் வரும் 25-ஆம் தேதியும் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி, தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோயில்களிலும் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பதியை அடுத்த சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில்களில் மாசி மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்துவது வழக்கம்.
 இந்நிலையில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு வரும் 24-ஆம் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இவ்விழா மார்ச் 4-ஆம் தேதி நிறைவடையும். அதேபோல், கபிலேஸ்வர சுவாமிக்கு வரும் 25-ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இவ்விழா மார்ச் 6-இல் நிறைவடையும். இதற்கான முன்னேற்பாடுகள் அந்தந்த கோயில்களில் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவம் தொடர்பான சுவரொட்டிகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
 பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாடவீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். இந்த விழாவையொட்டி திருப்பதி நகர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
 பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரும் 21-ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 23-ஆம் தேதி அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
 பிரம்மோற்சவ நாள்களில் அன்னமாச்சார்யா திட்டம், இந்து தர்ம பிரசார பரிஷத் ஆகியவை சார்பில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com