திருநள்ளாறு கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜையில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

திருநள்ளாறு கோயில் குடமுழுக்கையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனர்.
திருநள்ளாறு கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜையில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

திருநள்ளாறு கோயில் குடமுழுக்கையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று வழிபட்டனர்.
 திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (பிப்.11) நடைபெறவுள்ளது. இதற்காக 8 கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை இரவு தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை, இரவு 2 மற்றும் 3-ஆம் கால பூஜைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, சனிக்கிழமை காலை மற்றும் இரவில் 4 மற்றும் 5-ஆம் கால பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகள் யாகசாலையில் கலாகர்ஷனம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுவதால், மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகள் நிறைவுபெறும் வரை, பக்தர்கள் சந்நிதிகளில் வழிபடமுடியாது என்பதால், யாகசாலையில் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 இதனால், சனிக்கிழமை கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நளன் தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் சென்று, யாகசாலையில் வழிபட்டனர்.
 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா, தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருநள்ளாறு கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோரும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
 மூலவர், அம்பாள், ஸ்ரீ சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சந்நிதிகளில் பக்தர்கள் தரிசிக்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், சுவாமிகளை யாகசாலையில் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com