திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்: 19-இல் தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்: 19-இல் தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
 அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஆவணி, மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. நிகழாண்டு மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையை அடுத்து கொடிப் பட்டம் வெள்ளிப் பல்லக்கில் 9 சந்திகள் வழியாக கொண்டுவரப்பட்டது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புக் கட்டிய சு. சண்முகம் சிவாச்சாரியார் கொடியை ஏற்றினார்.
 கொடிமரத்துக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத் திரவியங்கள் உள்பட 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத பாராயணமும், ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாடினர்.
 இதில், திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சிபுரம் தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் பா. பாரதி, கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், வெள்ளைச்சாமி, உள்துறை மேலாளர் விஜயன், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார், திருவாவடுதுறை ஆதீன தென்மண்டல மேலாளர் ராமச்சந்திரன், காயாமொழி பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் அறங்காவலர் மு.இராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மு. சுரேஷ்பாபு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 மாலையில் அப்பர் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்தல், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா ஆகியவை நடைபெற்றது.
 குடவருவாயில் தீபாராதனை: பிப். 14-ஆம் தேதி 5ஆம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமி, அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆறாம் திருநாளான பிப். 15-ஆம் தேதி காலையில் கோ ரதம், இரவில் வெள்ளி ரதத்தில் வீதி உலா, ஏழாம் திருநாளான பிப். 16-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குள் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, இதைத் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைகிறார்.
 பிப். 19-இல் தேரோட்டம்: பிப். 18ஆம் தேதி சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். பிப். 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com