திருப்பாம்புரம் சேஷபுரீசுவரர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீசுவரர் கோயிலில் புதன்கிழமை ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது.
ராகு-கேது பெயர்ச்சியின்போது காண்பிக்கப்பட்ட மகா தீபாராதனை.
ராகு-கேது பெயர்ச்சியின்போது காண்பிக்கப்பட்ட மகா தீபாராதனை.


திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீசுவரர் கோயிலில் புதன்கிழமை ராகு-கேது பெயர்ச்சி நடைபெற்றது.
ராகு-கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள், அதாவது 18 மாதங்கள் தங்கியிருந்து, பலன்களைத் தருவர். அதன்படி, இதுவரை கடக ராசியிலிருந்த ராகு பகவான், மிதுன ராசிக்கும், மகர ராசியிலிருந்த கேது பகவான் தனுசு ராசிக்கும் புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு இடம் பெயர்ந்தனர். இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராகு-கேது சந்நிதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
நன்னிலம் அருகே திருப்பாம்புரத்தில் உள்ள அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை சேஷபுரீசுவரர் கோயிலில், ராகு-கேது தனிச்சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். ராகு காலங்களில் இச்சந்நிதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோருக்கு தோஷங்கள் விலகி நலம் கிடைக்கும் என்பதால், தினசரி ராகு கால நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதேபோல் ராகு-கேது பெயர்ச்சி நாளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முன்னதாக ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. ராகு-கேது சன்னிதி வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து மதியம் 1 மணிக்கு கடம் புறப்பாடாகி, ராகு-கேது சன்னிதியை அடைந்தது. இதைத் தொடர்ந்து ராகு-கேது பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பாலாபிஷேகம் நடைபெற்றது. பெயர்ச்சி நேரமான 2.02 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை பக்தர்களுக்கும் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com