திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தீவிரம்

திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தீவிரம்

திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீதர்பாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், ஸ்ரீசனீஸ்வர பகவான் தனி சன்னிதிகொண்டு அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

கும்பாபிஷேகடத நமடாடபபடமமு 12 அண்டுகள் நிறைவு பெற்றதால் கோயிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதைதொடர்ந்து கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப வசதிகளையும் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com