திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட
திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகை விழா


திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தை கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை தை மாத கிருத்திகையையொட்டி, புதன்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்கக் கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
காலை 10 மணிக்கு மலைக்கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் மலைக்கோயில் பின்புறம் அமைந்துள்ள நல்லான்குளம் பகுதியில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது. 
மாலை 5 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை பூஜை மற்றும் இரவு 7.30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதியில் திருவீதியுலா வந்தார். 
இந்த விழாவில் பக்தர்கள் சிலர் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். பொங்கல் விடுமுறை தொடர்ந்து ஐந்து நாள்கள் வந்ததாலும், தை கிருத்திகை என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
அதனால் அதிக அளவில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள எலப்பாக்கம், மதூர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் தைக் கிருத்திகையையொட்டி, பால் குடம் ஏந்தி வருதல், காவடி சுமந்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள எலப்பாக்கம் சின்மய விநாயகர், பாலமுருகன் கோயிலில் அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சின்மய பாலமுருகன் சந்நிதியில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, வெள்ளிக் கவசத்தால் சுவாமி சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், எலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுராந்தகத்தை அடுத்த மதூர் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைக் கிருத்திகையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றவேண்டி, மேளதாளம் முழங்க காவடி ஏந்தி வருதல், பால் குடம் ஏந்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com