அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் வாசிகளுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும் இடங்கள்! 

காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட  உள்ளூர்வாசிகள் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான நுழைவுச்..
அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் வாசிகளுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும் இடங்கள்! 


காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட  உள்ளூர்வாசிகள் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான நுழைவுச் சீட்டு தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்கப்படவுள்ளது. 

உள்ளூர்வாசிகள் ஜூலை 1-3, ஜூலை 12-24, ஆகஸ்ட் 5-12, ஆகஸ்ட் 16-17 ஆகிய 26 நாள்களில் மாலை 5 மணி முதல்  இரவு 8 மணி வரை கிழக்கு கோபுரம் வழியாக தரிசனம் செய்யலாம்.  

ஊரகப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கோவிந்தவாடி குருகோயில் நிர்வாக அலுவலர் அலுவலகம், திருப்புட்குழி கிராம நிர்வாக அலுவலகம், சிட்டியம்பாக்கம் நூலக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், உதவி இயக்குநர் (நில அளவை) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுச்சீட்டு வழங்கப்படும் இடங்கள்

வ.எண்

நுழைவுச்சீட்டு வழங்கும் மையம்

நகராட்சி வார்டு பகுதிகள்

1.

தேவர்லால் ராமசாமி பள்ளி

வார்டு 1 முதல் 7 வரை

2.

நகராட்சி அலுவலகம்

வார்டு 8 முதல் 12 வரை

3.

பொது சுகாதார கோட்ட அலுவலகம்

வார்டு 18 முதல் 25 வரை

4.

பிள்ளையார் பாளையம் -வரி வசூல் மையம்

வார்டு 13 முதல் 17 வரை மற்றும் வார்டு 30

5.

கூ.மு. நம்பி தெரு - வரிவசூல் மையம்

வார்டு 26 முதல் 29 வரை மற்றும் வார்டு 30

6.

நசரத்பேட்டை நூலகம்

வார்டு 41 முதல் 45 வரை

7.

செவிலிமேடு எல்லப்பா நகர் வரிவசூல் மையம்

வார்டு 46 முதல் 51 வரை

8.

விளக்கடிகோயில் தெரு அம்மா உணவகம்

வார்டு 31 முதல் 35 வரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com