நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் நாளை ஆனித் தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ல் நடைபெற உள்ளது.
நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் நாளை ஆனித் தேரோட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழாவுக்கான தேரோட்டம் ஜூலை 14 (நாளை) நடைபெற உள்ளது. 

பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. 

அதனால், திருநெல்வேலி  சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  டவுண் நான்கு ரதவீதிகள் மற்றும் தெற்கு மவுண்ட் ரோடு மற்றும் நயினார்குளம் சாலை ஆகிய பகுதிகளில் முற்றிலுமாக போக்குவரத்து தடைசெய்யப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக டவுண் வரும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் அருணகிரி திரையரங்கு வரை மட்டுமே அனுமதிக்கப்படும். பேருந்துகள் தவிர, இதர வாகனங்கள் சாப்டர் மேல்நிலைப் பள்ளி மற்றும் டவுண் அலங்கார வளைவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நகரம் வரும் பேருந்துகள் அனைத்தும் அருணகிரி திரையரங்கு அருகே பயணிகளை இறக்கிவிட்டு, தாமதம் செய்யாமல் உடனே திரும்ப வேண்டும். தென்காசி வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் வண்ணார்பேட்டை வழியாக ராமையன்பட்டி, கண்டிகைப்பேரி சாலையைப் பயன்படுத்திபழையபேட்டை சென்று அதே வழியில் திரும்ப வரவேண்டும்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக பேட்டை சுத்தமல்லி செல்லும் நகரப் பேருந்துகள் கண்டிகைப்பேரி வழியாக பழையபேட்டையை சென்றடைந்து இணைப்பு சாலையின் மூலம் பேட்டை செல்ல வேண்டும். 

திரும்ப வரும்போது தொண்டர் சன்னதி, சாலியர்தெரு வழியாக தச்சநல்லூர் வரவேண்டும். புதிய பேருந்து நிலையத்திலிருந்து முக்கூடல் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் சேரன்மகாதேவி வழியாக சென்று அதே வழியில் திரும்ப வரவேண்டும்.

பலத்த பாதுகாப்பு நெல்லையப்பர் கோயில் தேரோட்ட விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com