பக்தர்கள் கவனத்திற்கு: அத்திவரதரை தரிசிக்கும் நேரம் குறைப்பு!

காஞ்சிபுரம், அத்திவரதரை தரிசனம் செய்யும் குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 
பக்தர்கள் கவனத்திற்கு: அத்திவரதரை தரிசிக்கும் நேரம் குறைப்பு!

காஞ்சிபுரம், அத்திவரதரை தரிசனம் செய்யும் குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார். 

15-வது நாளில் இன்று பச்சைப்பட்டு உடுத்தி மலர் அலங்காரத்தில் பக்தர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ந்து இன்றும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. 15 நாட்களில் இதுவரை 15 லட்சம் பக்தர்கள் அருளாளனைத் தரிசனம் செய்துள்ளனர். வாரவிடுமுறை என்பதால் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தை விடத் திரளான பக்தர்கள் 7 கி.மீ தூரம் வரை வரிசையில் நின்று 6 மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். 

காஞ்சி மாவட்ட ஆட்சியர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில்,

நாளை முதல் அத்திவரதர் தரிசிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பெருமாளுக்கு அலங்காரம் செய்வதற்கு நேரமின்மை காரணமாக அதிகாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டுமின்றி கூடுதலாக 10 மினி பேருந்துகள் மற்றும் கூடுதலாக 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

இன்று காலை இசைஞானி இளையராஜா அத்திவரததை தரிசித்தார். அப்போது, அர்ச்சகர்கள் அவருக்கு அத்திவரதர் குறித்த வரலாறு கூறி விவரித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com