சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று பூச்சாட்டுதல்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று பூச்சாட்டுதல்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து முக்கிய தினங்களான ஆகஸ்ட் 5 ஆம் தேதி சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், ஆக்ஸ்ட் 7, 8, 9 ஆகிய தேதிகளில் பொங்கல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

மேலும் ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆக்ஸ்ட் 12-ஆம் தேதி வரை நாள்தோறும் உற்சவர் அம்மனுக்கு அபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார ஆராதனையும் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 13-ஆம் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு மகா அபிஷேகம், 1008 லிட்டர் பால் மற்றும் தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி ஆகியவற்றை கொண்டு அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடைபெற உள்ளன.

இதையடுத்து அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. மேலும் பிற்பகல் 1 மணிக்கு அலங்கார ஆராதனை அன்னதானம் நடைபெற உள்ளது எனக் கோயிலின் செயல் அலுவலர் வெ. ராசாராம், இரண்டாம் பூட்டு அலுவலர் சு. கல்பனாதத் மற்றும் உதவி ஆணையர் தா. உமாதேவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com