திருவண்ணாமலை ஸ்ரீவேதநாத ஈஸ்வரர் கோயிலில் ஜூன் 14-ல் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீவேதநாத ஈஸ்வரர் கோயில்..
திருவண்ணாமலை ஸ்ரீவேதநாத ஈஸ்வரர் கோயிலில் ஜூன் 14-ல் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீவேதநாத ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 14-ம் தேதி நடைபெறுகிறது.

வேடந்தவாடி கிராமத்தில் ஸ்ரீவேதநாயகியம்மை சமேத ஸ்ரீவேதநாத ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நான்கு வேதங்களும், முனிவர்களும் வழிபட்ட இந்தக் கோயில் அண்மையில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.

மேலும், கோயில் வளாகத்தில் 9 அடி உயரமுள்ள ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி கோயில் புதிதாக கட்டப்பட்டது. இந்தக் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. 

இதையொட்டி, புதன்கிழமை (ஜூன் 12) மாலை 2 மணிக்கு 9 அடி உயரமுள்ள ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சிலையை செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றம் பகுதியில் இயங்கி வரும் அகஸ்திய கிருபா அமைப்பின் நிறுவனர் அன்புச்செழியன் பிரதிஷ்டை செய்து வைக்கிறார். தொடர்ந்து, 1,008 சாதுக்களுக்கு வஸ்திரம், ருத்ராட்ச மாலை, விபூதி பிரசாதம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அவர் வழங்கி, அருளாசி வழங்குகிறார்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஸ்ரீவேதநாயகியம்மை சமேத ஸ்ரீவேதநாத ஈஸ்வரர் கோயில், 9 அடி உயர ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சிலை ஆகியவற்றுக்கும், மூலவர் சன்னதிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

மேலும், ஜூன் 12, 13, 14-ஆம் நாள்களில் காலை மகேஸ்வர பூஜைகளும், மாலை 7 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com