திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: பைக்குகளுக்கு அனுமதி ரத்தாக வாய்ப்பு

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மலைப்பாதையில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இரவு நேரங்களில் செல்வதற்கான அனுமதியை ரத்து செய்வது தொடர்பாக தேவஸ்தானம்
திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: பைக்குகளுக்கு அனுமதி ரத்தாக வாய்ப்பு


திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் மலைப்பாதையில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இரவு நேரங்களில் செல்வதற்கான அனுமதியை ரத்து செய்வது தொடர்பாக தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன் திருப்பதி மலைப்பாதையில் திடீரென்று சிறுத்தை ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பக்தர்களைத் தாக்கியது. இதில் ஒரு சிறுமி உட்பட இருவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால், தேவஸ்தானம் மலைப்பாதையில் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இரவு நேரங்களில் செல்வதற்கான அனுமதியில் சில மாற்றங்களைச் செய்வது பற்றி ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், தேவஸ்தான கண்காணிப்புப் பிரிவு தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி ஆகியோர் வனத்துறையினருன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். 
இது தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்க அதிகாரிகள் திட்டுமிட்டுள்ளனர். சேஷாசல காட்டுப்பகுதி வன உயிரினங்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், விலங்குகள் நடமாடுவது இயல்பானதுதான். எனவே, சிறுத்தை பக்தர்களைத் தாக்கிய பகுதியில் எச்சரிக்கைப் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விலங்குகள் நடமாடும் பகுதியில் 20 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட உள்ளது.
மேலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதிக்க மறுப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. நடைபாதை வழியிலும் இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை பக்தர்கள் செல்வதற்குத் தடை விதிக்கவும் தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com