மவுனமே பூரண ஞானம்.. எப்படி? 

ராமர், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆசிரமத்திலிருந்து..
மவுனமே பூரண ஞானம்.. எப்படி? 

ராமர், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆசிரமத்திலிருந்து மற்றொரு ஆசிரமத்திற்குச் சென்றனர். அப்படிக் கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். 

இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷி குமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராம லட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமர் சீதையின் வருகையை அறிந்தனர். ராம லட்சுமணன் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. 

சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையைச் சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக "இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டிக் கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா? பக்தனுக்கும் இது தான். 

கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளைத் தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். "மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும்"

பகவான் ஸ்ரீ ரமணர்

நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்

ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம். 

- கோவை பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com