திருப்பதி கோவிந்தராஜர் கோயில் குளத்தில் லேசர் கண்காட்சி

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயில் திருக்குளத்தில் 20 நிமிடங்கள் லேசர் ஒளிக்கற்றை மூலம் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம்
திருப்பதியில் பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தேவஸ்தான செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம்.
திருப்பதியில் பக்தர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தேவஸ்தான செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம்.


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயில் திருக்குளத்தில் 20 நிமிடங்கள் லேசர் ஒளிக்கற்றை மூலம் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் தெரிவித்தார்.
திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை முதல் முறையாகத் தொடங்கப்பட்டது. காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை நடந்த இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் பதிலளித்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருச்சானூரில் உள்ள தோட்டத்தில் பத்மாவதி திருக்கல்யாணம் மற்றும் சீனிவாசகல்யாண விருத்தாந்தம்  ஆகிய கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் திருக்குளத்தில் 20 நிமிடங்களுக்கு லேசர் கண்காட்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் பஞ்சாங்க நாள்காட்டிகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விற்பனை விரைவில் தொடங்கும். கோவிந்தராஜர் கோயிலில் காணாமல் போன தங்க கிரீடங்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. திருச்சானூரில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி நிலையத்தின் நிர்வாகம் குறித்து செயல் அதிகாரியிடம் விவாதித்து முடிவு மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com