கூடுவாஞ்சேரி  சீனிவாசப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்கள்.
கூடுவாஞ்சேரி  சீனிவாசப்பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்கள்.

சீனிவாசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்


கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 
இக்கோயிலில் மூலவர்களான சீனிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை வியாழக்கிழமை நடத்தப்பட்டன. உற்சவ மூர்த்திகளான பத்மாவதித் தாயார், ஆண்டாள் நாச்சியார், வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தையொட்டி பட்டு வஸ்திரம், இனிப்பு, காரம், பழ வகைகள், திருக்கல்யாணத்திற்கான அனைத்து பொருள்களுடன் யாக குண்ட பூஜை நடைபெற்றது. அத்துடன் தொடங்கிய சிறப்பு பூஜையில் மந்திரங்கள், மங்கல இசை முழங்க பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளின் கல்யாணக் கோலத்தை தரிசித்தனர். திருக்கல்யாண உற்வசவத்தையொட்டி பக்தர்களுக்கு சுவாமிபிரசாதம் வழங்கப்பட்டதோடு, கல்யாண விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாச கைங்கர்ய சபா குழுவினர்  மற்றும் சேவார்த்திகள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com