உங்க ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் இருக்கா?

கஜ கேசரி யோகம் என்பது ஒரு உயர்தரமான யோகம் என்று ஜாதக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
உங்க ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் இருக்கா?

கஜ கேசரி யோகம் என்பது ஒரு உயர்தரமான யோகம் என்று ஜாதக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. கஜம் என்றால் யானையை குறிப்பதாகவும். கேசரி என்றால் சிங்கத்தைக் குறிப்பதாகவும். கஜ கேசரி யோகம் .

எப்படி பல வலுவுள்ள யானைகள் சேர்ந்து சண்டையிட்டாலும் ஒரு சிங்கத்தை வெற்றி கொள்ள முடியாதோ, அதுபோல் ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு கொடுமையான தசை புத்திகள் நடந்தாலும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டமணி சனி, கண்டக சனி, பாதகாதிபதி தசை புத்திகள் நடந்தாலும், கஜ கேசரி யோகம் அமையப்பெற்றால், அவை ஜாதகருக்கு ஒரு கெடுதலும் செய்ய முடியாது.

இதன் பொருள் என்னவென்றால், பல ஆயிரம் யானைகள் ஒன்று கூடி நம்மை தாக்க வந்தாலும் ஒரு சிங்கம் அதனை எதிர்த்துப் போராடக்கூடிய ஆற்றல் இருக்கும். அதாவது ஒரு சிங்கத்தைக் கண்டு, பயப்படும் யானைக் கூட்டங்கள் போன்று என்ற பொருள்படும். இந்த கஜ கேசரி யோகம் கொண்ட ஜாதகர்களுக்கு, தங்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் யானைக் கூட்டத்தையே எதிர்கொண்டு எப்படி ஒரு தனியான சிங்கம் அதனை விரட்டி வெற்றிகொள்கிறதோ அதே போன்று இந்த கஜகேசரி யோகம் கொண்டவர்களுக்கும் இது போன்ற திறன் இருக்கின்றது.

எப்படி தஞ்சாவூர் பொம்மை சாய்த்தாலும் கீழ் விழாது இருக்குமோ அது போல் ஜாதகர் எந்த ஒரு மோசமான தசை புக்திகளிலும் பாதிக்கப்படாமல் இருப்பார். ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அமையப்பெற்றால் ஏற்படும் யோகம் ஆகும்.

சந்திரன் குருவுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது சந்திரன் குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும் அல்லது சந்திரனை குரு பார்வையிட்டாலும், கஜ கேசரி யோகம் அமையப்பெறுகிறது.

கஜகேசரி யோகம் மிகவும் பலமுள்ளதாக அமைய குரு அல்லது சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றோ அல்லது நீச்சம் பெறாமல் இருக்கவேண்டும். குரு அல்லது சந்திரன் வர்கோத்தமம் பெற்றிருந்தாலும் மிகவும் பலம் பெற்றது என்று கூறலாம்.

ஜாதகத்தில் சந்திரனோ அல்லது குருவோ நீச்சமடைதலும், பலவீனமடைந்தாலும், தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ, நவாம்சத்தில் நீச்சமடைந்தாலோ நல்ல பலன்களை தராது. ஜாதக சிந்தாமணி என்ற நூல் மட்டும் கஜகேசரி யோகம் உண்டாக இரு சிறப்பு விதிகள் மட்டுமே வேண்டும் என்று கூறுகிறது.

1. தனுசு ராசியில் குரு இருக்க சந்திரன் மீனத்தில் இருப்பதும்,

2. ரிஷபத்தில் சந்திரன் இருக்க கும்பத்தில் சந்திரன் இருப்பதும்  மட்டும்தான் கஜ கேசரி யோகம் என்று கூறியுள்ளது. இதில் உள்ள பொருள் என்ன வென்றால் குருவோ அல்லது சந்திரனோ பலம் பெற வேண்டும் என்பதே.

கஜ கேசரி யோகத்தால் என்ன பலன் ?

கஜ கேசரி யோகம் மிகவும் பலமுள்ளதாக அமையப் பெற்றிருந்தால் ஜாதகருக்கு நற்பெயர், தலைமை தாங்கும் ஆற்றல், புகழ், நற்குணம், ஈகை, பெருஞ்செல்வம், நுண்ணறிவு, உயர்கல்வி, உயர்ந்த குடும்பம், இறந்த பிறகும் நிலைத்திருக்கும் புகழ் ஆகியவை ஏற்படும். மிகவும் பலம் வாய்ந்த கஜ கேசரி யோகம் புகழ், பல தலைமுறைக்கு வேண்டிய பணம், நல்ல மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியவற்றைத் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com