காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
காப்புகட்டும்  நிகழ்ச்சியையொட்டி  ஊர்வலமாக  எடுத்துச்  செல்லப்பட்ட  பூங்கரகம்.

இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கவச அலங்காரம் பொருத்தப்பட்டு அம்மன் காட்சியளித்தார். 
பின்னர், கோயில் வளாகத்தில் இருந்து பூங்கரகம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ராபின்சன் குளம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி, வாணவேடிக்கை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 
தொடர்ந்து மே11 ஆம் தேதி இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம், 14 ஆம் தேதி தேரோட்டம், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 15 ஆம் தேதி அம்மன் சிரசு  ஊர்வலம், மே17 ஆம் தேதி இரவு பூப்பல்லக்கு பவனி ஆகியன நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com