சித்திரை கிருத்திகை பால்காவடி விழா

சித்திரை கிருத்திகையையொட்டி அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள எலப்பாக்கம் சின்மய விநாயகர், பாலமுருகன் கோயிலில் பால்காவடி பெருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன்.


சித்திரை கிருத்திகையையொட்டி அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள எலப்பாக்கம் சின்மய விநாயகர், பாலமுருகன் கோயிலில் பால்காவடி பெருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.
எலப்பாக்கம் சின்மய விநாயகர், பாலமுருகன் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை கிருத்திகையை முன்னிட்டு பால்காவடி மற்றும் பால்குடம் ஊர்வலம்  நடைபெறுவது வழக்கம். இக்கோயிலின் 59-ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை பால்காவடி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை மங்கல இசையுடன் தொடங்கியது. மூலவர் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
இதைத் தொடர்ந்து, திங்கள் கிழமை அதிகாலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணிக்கு சேவற்கொடி ஏற்றப்பட்டது. 9 மணிக்கு காவடி பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் பக்தர்கள் பால்காவடி, அன்னக் காவடி, வேல் காவடி போன்ற பல்வேறு காவடிகளை ஏந்தி வந்து கோயிலில் சமர்ப்பித்தனர். தொடர்ந்து, மேள, தாள முழக்கங்களுடன் 108 பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். 
பின்னர், சின்மய விநாயகர், பாலமுருகன், மரகதாம்பிகை உடனுறை மாணிக்கீஸ்வரர் சுவாமிகளுக்கு மகா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு, இந்திர விமானத்தில்,  புஷ்ப அலங்காரத்துடன் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பக்தி இன்னிசை, தீச்சட்டி நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com