சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜயந்தி விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜயந்தி விழா வியாழக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மங்கள தீர்த்தக் குளத்தில் ஆதிசங்கரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம். (வலது)  தங்கத் தேரில் பவனி வந்த ஆதிசங்கரர்.
மங்கள தீர்த்தக் குளத்தில் ஆதிசங்கரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம். (வலது)  தங்கத் தேரில் பவனி வந்த ஆதிசங்கரர்.


காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜயந்தி விழா வியாழக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள காலடி எனும் பகுதியில் அவதரித்தவர் ஆதிசங்கரர். இவர் நாடு முழுவதும் பாதயாத்திரை  மேற்கொண்டு, பல்வேறு நதிகளில் நீராடி, கொல்லூர் சென்று மூகாம்பிகையைத் தரிசனம் செய்தார். மேற்கில் துவாரகையிலும், வடக்கே பத்ரியிலும், கிழக்கே புரியிலும், மத்தியில் சிருங்கேரியிலும் தெற்கே காஞ்சியிலும் பீடங்களை நிறுவினார். 
காஞ்சியில் காமகோடி பீடத்தை நிறுவி அவரே அதன் முதல் குருவாக இருந்தார். காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்தார். தான் கைலாயத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான யோக லிங்கத்தை காமகோடி பீடத்தில்  ஸ்தாபித்துள்ளார். 
ஆண்டுதோறும் ஆதிசங்கரர் ஜயந்தி விழா சங்கர மடத்தில் விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, மே 5-ஆம் தேதி விழா தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் ஆதிசங்கரர் சிலை பல்லக்கில் கொண்டு செல்லப்பட்டு, சர்வ தீர்த்தக் குளம், பிரம்மேந்திரர் மடத்துக் குளம், ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை குளம் ஆகிய தீர்த்தங்களில் அபிஷேகம் நடத்தப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, ஆதிசங்கரர் ஜயந்தி நாளான வியாழக்கிழமை ஆதிசங்கரர் சிலையை சங்கர
மடத்திலிருந்து மங்கள தீர்த்தக் குளத்துக்கு பல்லக்கில் கொண்டு சென்றனர். 
அங்கு அவருக்கு தேன், பால், தயிர், புனித நீர், பழங்கள், மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ஆதிசங்கரர் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இந்த, ஊர்வலத்தில் வேத, வைதீக பிராமணர்கள், கனபாடிகள், வித்யார்த்திகள், பக்தர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர், பெரியவர் ஆகியோரின் பிருந்தாவனத்திலும் சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள், வேதபாராயணம், அன்னதானம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com