திரௌபதி அம்மன், முத்துமாரியம்மன் கோயில்களில் தீ மிதித் திருவிழா

வீரக்கோயில் மோட்டூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமித் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
 சித்திரைத்  திருவிழாவையொட்டி சிறப்பு  அலங்காரத்தில்  காட்சியளித்த திம்மாவரம் முத்துமாரியம்மன். (வலது) மோட்டூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்.
 சித்திரைத்  திருவிழாவையொட்டி சிறப்பு  அலங்காரத்தில்  காட்சியளித்த திம்மாவரம் முத்துமாரியம்மன். (வலது) மோட்டூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவில் தீ மிதித்த பக்தர்கள்.


வீரக்கோயில் மோட்டூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீமித் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
திருத்தணியை அடுத்த வீரக்கோயில் மோட்டூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மஞ்சள், சந்தனக் காப்பு நடத்தி பக்தர்கள் வழிபட்டனர். பிற்பகல் மகாபாரதச் சொற்பொழிவுகளும் இரவில் தெருக்கூத்து, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை, கோயில் வளாகத்தில் துரியோதனன் வதம் என்ற படுகள நிகழ்ச்சி முடிந்த பின் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு அம்மனை வழிபட்டனர். 
காப்பு கட்டி விரதமிருந்த ஆண், பெண் பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர், இரவு கோயில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அதையடுத்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
விழாவையொட்டி கோயில், மண்டபம் மற்றும் சாலையின் இரு புறங்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழாவில் வீரக்கோயில் மோட்டூர் கிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
முத்துமாரியம்மன் கோயிலில்...
செங்கல்பட்டு, மே 13: செங்கல்பட்டை அடுத்த  திம்மாவரம் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி முத்துமாரியம்மன் கோயிலில் 6-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 6-ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி காப்புக் கட்டுதல், பாலாற்றில் புனித நீர் சேகரித்தல், கரக அலங்கார ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன. 
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் கூழ்வார்த்தல், பிற்பகல் பால்குட ஊர்வலம், மாலை தீமிதி விழா நடத்தப்பட்டன. தீமிதி விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. புனிதநீர் சேகரித்து, கரக அலங்கார ஊர்வலம் வந்தவுடன் அம்மன் முன்னிலையில் தீமிதி விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்களும், குழந்தைகளும் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்ற தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். 
இந்த விழாவையொட்டி இரவு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைக்குப் பின் அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு கும்பப் படையல் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் எம்.மாசிலாமணி, எம்.ராஜா, எஸ்.மதியழகன், எம்.சீனிவாசன் மற்றும் திம்மாவரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com