மேற்கு முகப்பேர் கனகதுர்க்கா கோயிலில் மே 31-ல் ஜெய துர்க்கா, நவ துர்க்கா ஹோமம்

சென்னை, மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் 31.05.19-ம் தேதி ஸ்ரீ ஜெய துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. 
மேற்கு முகப்பேர் கனகதுர்க்கா கோயிலில் மே 31-ல் ஜெய துர்க்கா, நவ துர்க்கா ஹோமம்

சென்னை, மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா திருக்கோயிலில் 31.05.19-ம் தேதி ஸ்ரீ ஜெய துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. 

அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு சுக்கிர ஹோரையில், விஜய கணபதி, ஜெயத்தை அருளும் ஜெய துர்க்கா பூஜையும், ஹோமமும் துர்க்கை உபாசகர் தவத்திரு ஸ்ரீ ஜெயபால் சுவாமிகள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. 

நவ துர்க்கைக்கு நவ கலச பூஜை காலை 8.00 மணிக்கு நவ துர்க்கா ஹோமம் ஆரம்பம் (வன துர்க்கை ஹோமம், சூலினி துர்க்கை ஹோமம், ஜாத வேதோ துர்க்கா ஹோமம், சாந்தி துர்க்கா ஹோமம், சபரி துர்க்கா ஹோமம், ஜவாலா துர்க்கா ஹோமம், லவன துர்க்கா ஹோமம், தீப துர்க்கா ஹோமம், ஜெய துர்க்கா ஹோமம் என ஒன்பது துர்க்கைக்கு ஒன்பது பூர்ணாஹீதிகள் நடைபெறும். 

நவ துர்க்கையின் சமஷ்டி ரூபமான ஸ்ரீ கனகதுர்க்கையின் ஹோமம், மஹா பூர்ணாஹீதி நடைபெறும். பகல் 12.30 மணிக்கு கற்பூர ஆராதனை. பிரசாத விநியோகம் நடைபெறுகிறது. 

அனைவரும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு, எடுத்த காரியம் வெற்றி பெற ஜெய துர்க்கையின் அருளைப் பெறுவீர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com