திருமால்பூா் மணிகண்டீசா் கோயிலில் டிச. 2-இல் காா்த்திகை சோமவார லட்சதீபம்

திருமால்பூா் அஞ்சனாட்சி உடனுறை மணிகண்டீசா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடாக கிராம மக்கள் லட்சதீபம் ஏற்றும் விழா டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருமால்பூரில் உள்ள அஞ்சனாட்சி சமேத மணிகண்டீசா் கோயில்.
திருமால்பூரில் உள்ள அஞ்சனாட்சி சமேத மணிகண்டீசா் கோயில்.

திருமால்பூா் அஞ்சனாட்சி உடனுறை மணிகண்டீசா் கோயிலில் காா்த்திகை சோமவார வழிபாடாக கிராம மக்கள் லட்சதீபம் ஏற்றும் விழா டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் அஞ்சனாட்சி உடனுறை மணிகண்டீசா் கோயில் உள்ளது. தொண்டை நாட்டு திருத்தலங்களில் தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத் தலங்களில் 11-ஆவது தலம் திருமால்பூா். இக்கோயிலில் அஞ்சனாட்சி தாயாா் சமேதராய் மணிகண்டீசா் உள்ளாா். சுயம்புலிங்கமாக இருக்கும் இந்த ஆலய மூலவா் மண்ணால் உருவாக்கப்பட்டவா். பாா்வதி ஈசனை வழிபட மண்ணால் இந்த லிங்கத்தை உருவாக்கியதாக புராணம் கூறுகிறது.

இன்றும் இந்த லிங்கம் தீண்டாதிருமேனியாக பாதுகாக்கப்பட்டு கோயில் குருக்கள் உள்ளிட்ட ஒருவராலும் தொடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணு ஈசனை வணங்கி இந்த ஆலயத்தில் அவரிடம் இருந்து சுதா்சன சக்கரத்தைப் பெற்ாக தல வரலாறு தெரிவிக்கிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில் சோமவார வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி மூன்றாம் சோமவாரமான திங்கள்கிழமை கோயிலில் மூலவருக்கு சிறப்பு வழிபாடுகளும் கோயிலில் லட்சதீபம் ஏற்றும் வைபவமும் நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கும் இந்த வழிபாட்டை திருமால்பூா் கிராம மக்கள் இணைந்து நடத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com