நெல்லை ஜடாயு படித்துறையில் சிறப்பு தாமிரவருணி நதி ஆரத்தி!

தாமிரவருணிபுஷ்கரத்தின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி அருகன்குளம் ஜடாயு
நெல்லை ஜடாயு படித்துறையில் சிறப்பு தாமிரவருணி நதி ஆரத்தி!

திருநெல்வேலி: தாமிரவருணி புஷ்கரத்தின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி அருகன்குளம் ஜடாயு படித்துறையில் சிறப்பு நதி ஆரத்தி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தாமிரவருணி மகாபுஷ்கரம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையடுத்து நிகழாண்டும் அதே நாளில் அருகன்குளம் எட்டெழுத்துப்பெருமாள் கோயில் கோசாலை ஜடாயு படித்துறையில் திங்கள்கிழமை மகாபுஷ்கரவிழா கொண்டாடப்பட்டது. 

அதன்படி காலையில் சிறறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து தாமிரவருணி நதியில் பெருமாள் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனர்.

பின்னா் மாலையில் சிறப்பு நதி ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமானுஷ சுவாமிகள் தலைமை வகித்தார். நதிகளை போற்றுவோம், நதிகளை வணங்குவோம் என்ற முழக்கத்துடன் பூஜைகள் தொடங்கின. மங்கள இசையுடன் சிறப்பு நதி ஆரத்தி நடைபெற்றது. 

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை எட்டெழுத்துப் பெருமாள் கோயில் கோசாலை அறக்கட்டளை நிர்வாக இயக்குநா் ராமலட்சுமி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com