வெற்றி வேண்டுமா? தக்கோலம் சோமநாதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வன்னி மரத்தை வழிபடுங்கள்! 

தக்கோலம் ஸ்ரீ இரத்தினவல்லி சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வன்னி மரத்திற்கு..
வெற்றி வேண்டுமா? தக்கோலம் சோமநாதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வன்னி மரத்தை வழிபடுங்கள்! 

தக்கோலம் ஸ்ரீ இரத்தினவல்லி சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வன்னி மரத்திற்கு வரும் விஜயதசமி அன்று (08.10.2019) செவ்வாய்க்கிழமை விசேஷ சிறப்பு பூஜையாக 21 பிரதட்சணமும் 8 தீபமும் ஏற்றி வழிபட சகல வெற்றியும் அடையலாம்.

வன்னி மரம் ஜெயதேவரின் வடிவமாகப் போற்றப்படுகின்றது. மகாபாரதத்தில் பாண்டவர்களின் அஞ்ஞான வாசத்தின் போது தங்களின் ஆயுதங்களை வெற்றி தரும் வன்னி மரப்பொந்தில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகின்றது. வன்னி மரத்தின் இலைகள்  ஸ்ரீ விநாயகருக்கும், ஸ்ரீ சனீஸ்வரருக்கும் விருப்பமானதாகும்.

இவ்வாண்டு செவ்வாய்க்கிழமையில் வரும் விஜயதசமி மிக, மிக விசேஷமானது. வன்னிமரம் மிகவும் வசீகரமானதாகும். வன்னிமரம் என்றதுமே விருத்தாசலம் என்று தான் அனைவருக்கும் ஞாபகம் வரும், விருத்தாசலத்தில் விருத்தகிரி ஆலயத்தில் பழமையான வன்னிமரம் உள்ளது.

அது போன்றே அருள்மிகு சோமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள இம்மரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல நூற்றாண்டுகளாக இம்மரம் இருந்து வருகிறது. வணங்குகின்ற பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுவது இம்மரத்தின் சிறப்பம்சமாகும். விஜயதசமி அன்று வன்னிமரத்திருவிழா நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று நலம் பெறுக. 

விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்:

திருமணத்தடை, குழந்தைப்பேறு, வேலை வாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, உடல் நலம் போன்ற பல நன்மைகளை அடையலாம். சனி நீசம், பகை ஏற்பட்டவருக்கும், சனி திசை, சனிபுத்தி, சனி அந்தாரம் நடப்பவருக்கும், ஏழரை நாட்டுச்சனி, கண்ட சனி, அஷ்டம சனி நடப்பவருக்கும், மற்றும் சனியினால் ஏற்படும் சகல தோஷங்களும் நீங்கி நன்மைகள்
நடைபெறும்.

மல மாசத்தில் சுபகாரியங்கள் செய்திருந்தாலும், திருமணம் 8வது ராசியில் செய்து இருந்தாலும், விருஷ (பால்மரம்) வெட்டியதாலும் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

கோயில் குருக்கள்
மு. கார்த்திகேய குருக்கள்
8870770472

- தகவல்: எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com