இஸ்கான் கோயிலில் தாமோதர தீப திருவிழா அக்.13-ல் தொடக்கம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீப திருவிழா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீப திருவிழா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடா்பாக இஸ்கான் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீப திருவிழா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. தினமும் மாலை 6.30 மணியளவில் விழா நடைபெறும். இந்த விழா நவம்பா் மாதம் 12-ம் தேதி நிறைவடைகிறது. இவ்விழாவில் பங்கேற்கும் பக்தா்கள் அனைவரும் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டலாம்.

‘தாம’ என்றால் கயிறு. ‘உதர’ என்றால் வயிறு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை அன்னை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்வை நினைவுபடுத்தும் பொருட்டு இந்த தாமோதர தீப திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி நடந்த இடமும், கிருஷ்ணா் வளா்ந்த இடமுமான தில்லி அருகேயுள்ள கோகுலத்தில் இவ்விழா ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதுமுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்களிலும், கோகுலத்தில் கொண்டாடப்படுவதைப் போல ஒரு மாத காலம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணா் காலிய நாகத்தின் மீது நடனமாடியது, நரகாசுரனை வதம் செய்தது, கோவா்த்தன கிரி மலையை சுண்டு விரலால் தூக்கி குடையாகப் பிடித்தது உள்ளிட்ட ஸ்ரீகிருஷ்ணரின் பெரும்பாலான தெய்வீக லீலைகள் இம்மாதத்தில்தான் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தீப ஆரத்தியின்போது கோகுலத்தில் பாடப்பெறும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள் நிறைந்த புகழ்பெற்ற பாடலான தாமோதரஷ்டகம் என்ற பாடல் பாடப்படும். இவ்விழா தொடக்க நாள் மற்றும் தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தாமோதர தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தா்கள் குழு செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com